திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் தமிழன் பிரசன்னா. இவருடைய மனைவி நதியா இன்று வீட்டின் அறையில் தனியாக இருந்த போது கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்ததன் காரணமாக தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மனைவி நதியா தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நதியாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த தமிழன் பிரசன்னாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன்னுடைய மனைவிக்கு இன்று பிறந்தநாள் என்றும், அவர் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி அதை முகநூலில் பதிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடலாம் என்று தெரிவித்ததால் நேற்று இரவிலிருந்து கோபத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.