தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சரின் பொது நிவாரண பணிகளுக்காக போத்தீஸ் நிறுவனம் ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை போத்தீஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ரமேஷ் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.