நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தடுப்பூசித் தொடர்பான விழிப்புணர்வு பேனர் மதுக் கடைகள் முன்பாக வைக்க வேண்டும் என்றும் மது கடை ஊழியர்கள் 15 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.