நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் செல்லத்துரை(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைதியின் சாவு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.