Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் திருவிழா சென்ற நேரம் பார்த்து…. கைவரிசை காட்டிய இளம்பெண்… போலீஸ் அதிரடி கைது…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தம்பதிகள் கோயிலுக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவை காண்பதற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த சிவகுமார் வீட்டிலிருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜி என்ற பெண்ணை சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்தபோது அவர் வைத்திருந்த 1.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் சிவகுமார் வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் அவர் பலர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |