பிரான்சில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அழுகிய உடல்கள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர் Frederic Dardel. இவர் சடலங்களை சரியாக பாதுகாக்காமல் சேதப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடத்தில் இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் உடல்தான மையங்களில் சடலங்கள் அழுக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எலிகள் சேதப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனியாரிடம் விற்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதால், அரசாங்கத்தால் அந்த மையம் மூடப்பட்டது. மேலும் அந்த மையத்தில் இருக்கும் சடலங்கள் நிர்வாணமாகவும், உடல்கள் துண்டாக்கப்பட்டு, கண்கள் திறந்தபடி ஸ்ட்ரெச்சரில் குவிந்து கிடந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தனியார் நிறுவனத்திற்கு 400 யூரோக்களுக்கு, கைகள் மற்றும் கால்களும், ஒரு சடலம் 900 யூரோக்கள் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பல நபர்கள் மாட்டியுள்ளனர். இதில் மாட்டாமல் தப்பி வந்த Frederic, மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.