உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், பணியாற்ற உள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்திலுள்ள சவுதாம்ப்டனில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவர்களாக பணியாற்ற உள்ளனர் .
தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றியுள்ளார். இவர்களுடன் கிறிஸ் பிராட் போட்டியின் நடுவராக பணியாற்றி உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் , இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் செப்டம்பர் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது.