பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் திருமணத்திற்கு முன்பே மகாராணியின் பெயரை, தன் குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்று விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு “லிலிபெட்” என்று மகாராணியின் செல்லப் பெயரை சூட்டியிருக்கிறார். அதாவது அந்த பெயர் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் மட்டுமே அவரை செல்லமாக அழைக்கும் பெயர். எனவே தன் தனிப்பட்ட பெயரை ஹரி மகளுக்கு சூட்டியதால் மகாராணி வருத்தமடைவார் என்று கூறப்பட்டது.
ஆனால் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாலும், அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், அரச குடும்பத்தின் மீது அதிகமாக குற்றச்சாட்டுகளை வைத்ததாலும் தான், ஹரி தன் குழந்தைக்கு மகாராணியின் செல்ல பெயர் வைத்தது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அரச குடும்ப வட்டாரத்தில் ஒருவர், இது குறித்து கூறுகையில், ஹரி தன் வாழ்வில் மேகனை சந்திப்பதற்கு முன்பே, “எனக்கு பெண் குழந்தை பிறந்தால், மகாராணியின் லிலிபெட் என்ற பெயரைத்தான் வைப்பேன்” என்று தான் மிகவும் விரும்பும், தன் பாட்டி மகாராணியாரிடமே கூறியுள்ளார். அதனை கேட்ட மகாராணி மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இளவரசர் ஹரி, அவரின் பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார். அவர் சிறுவனாக இருந்தபோதும், தற்போதும் தன் மனதில் உள்ள விசயங்கள் அனைத்தையும், பாட்டியிடம் மட்டுமே கூறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.