Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸீயின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸீ நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ‌.

தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து டாப்ஸீ வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

https://twitter.com/taapsee/status/1402240050503376897

தற்போது நடிகை டாப்ஸீ பாலிவுட்டில் இயக்குனர் விணில் மேத்யூ இயக்கத்தில் ‘ஹஸீன் தில்ரூபா’ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அமித் திரிவெதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . இந்த படம் வருகிற ஜூலை 2-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.

Categories

Tech |