தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க ஒன்றிய நிதி அமைச்சரையும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரையும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நம்முடைய ஒன்றுபட்ட கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.