சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி புதுபல்லகச்சேரி கிராமப்புறத்தில் சட்ட விரோதமாக தனது வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்த ராமச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.