துணை ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஷ் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய முதலாவது வெளிநாட்டு பயணமாக கவுதமலா செல்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கமலா ஹரிஷ் மேரிலேண்ட் மாகாணத்திலிருக்கும் ஜே.பி.ஏ விமானப்படை தளத்திலிருந்து தனி விமானத்தின் மூலம் கவுதமலாவிற்கு புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கமலா ஹரிஷ் புறப்பட்ட விமானத்தில் 30 நிமிடங்கள் கழித்து திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டிகள் மீண்டும் ஜே.பி.ஏ விமானப்படை தளத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். இதுகுறித்து ஜே.பி.ஏ விமானப்படை தளத்தில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பின் விமானிகள் பத்திரமாக வானூர்தியை தரையிறக்கியவுடன் அதிலிருந்து வெளியே வந்த துணை ஜனாதிபதி நான் பத்திரமாக உள்ளேன் என்றுள்ளார். இதனையடுத்து கமலா ஹரிஷ் 1 1/2 மணி நேரம் கழித்து மற்றொரு விமானத்தில் கவுதமலா சென்றுள்ளார்.