Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” கதறி அழுத தாய்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

மது குடிக்க பணம் தராமல் தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரம் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன் அடிக்கடி பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹரிஹரனின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |