மரத்தில் இருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குணசேகரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் அப்பகுதியில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த குணசேகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குணசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாசுதேவநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.