உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த 5 பேர்அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.