வட மாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகூர் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வடமாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் தாஸ்-அஞ்சு தாஸ் தம்பதிகள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அர்ஜுன் தாஸ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சு தாஸ் அந்த செங்கல் சூளையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்ற அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான நான்கு ஆண்டுகளில் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.