ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து கார்மேகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய லாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.