தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. பிஎஃப் கணக்கோடு ஆதார் எண் இணைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் Online Services என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் e-KYC Portal என்ற வசதியில் link UAN aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து UAN நம்பரையும் செல்போன் எண்ணையும் பதிவிட வேண்டும். உடனடியாக உங்களது செல்போனுக்கு ஒரு OTP வரும். அதைப் பதிவிட்டு, பின்னர் ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும். பின்னர் proceed கொடுத்தால் மீண்டும் ஆதாருக்கான ஓடிபி சரிபார்ப்பு முடித்துவிட்டால் ஆதாருடன்உங்கள் PF கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.