தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.