இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகின்றார். அவரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே 14-ஆம் தேதி முடிவடைய உள்ளது. அவரின் தலைமையில் கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுசில் சந்திரா, மத்தியசட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இருக்கு தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் பற்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேர்தல் போட்டியிட கூடியவர்கள் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அதனால் இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவம் கொண்டவர்.