தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அளிக்கப்படாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுபடுத்த தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் விரைவில்கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்றும், தினசரி கோரணா பாதிப்பானது 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 18 ஆயிரமாக குறைந்துள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.