சாலை வரி செலுத்தாமல் சென்ற தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அந்த பேருந்தில் கோவையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை வரியை செலுத்தாமல் பேருந்தை இயக்கியதற்காக உரிமையாளருக்கு அதிகாரி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்திரவிட்டார். மேலும் அந்த தனியார் பேருந்துக்கு செலுத்த வேண்டிய சாலை வரி 48,610 ரூபாயை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.