சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதராம்பட்டி இராமலிங்க நகரில் வசிக்கும் விவசாயி சிவலிங்கம் என்பவரின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து சிவலிங்கம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக சிவலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயம் மற்றும் 100 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்து விட்டனர்.