தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கொரோனா நிவாரண தொகையை தாமதிக்காமல் அந்தத் துறை தலைவர்கள் உடனடியாக வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கான அரசு நிவாரணத் தொகையை சம்பந்தப பட்டவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.