நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் முதல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
The #HealingSong OUT NOW! 🎶
#IdhuvumKadandhuPogum🌟 ➡️ https://t.co/fMgKwZ64ui
இதுவும் கடந்து போகும் 😍 ➡️ https://t.co/qTcGKcs45u— Nayanthara✨ (@NayantharaU) June 9, 2021
மேலும் கடந்த வருடம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.