Categories
தேசிய செய்திகள்

போட்டி போட்டுக்கொண்டு… கள்ளத் தொடர்பில் இருந்த கணவன் மனைவி… பின்னர் அரங்கேறிய கொடூரம்….!!!

கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே ராஜ் என்பவர் புவனேஸ்வரிக்கு அறிமுகமாகியுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆனாலும் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறார் என்று கணவன் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். புவனேஸ்வரியும், கள்ளக்காதலனும் இணைந்து கணவனை கொலை செய்ய முடிவு செய்து கடந்த 2ஆம் தேதி திட்டமிட்டபடி கொலை செய்துள்ளனர். பின்னர் தனது கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று நாடகமாடி உள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து புவனேஸ்வரியும், கொலைக்கு உறுதுணையாக இருந்த புவனேஸ்வரியின் கள்ளக்காதலில் ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |