நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடிப்பதை யோகிபாபு உறுதி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தள பக்கத்தில் கேட்ட போது தளபதி 65 படத்தில் நடிப்பதை யோகி பாபு உறுதி செய்தார் . ஏற்கனவே நடிகர் விஜய்யின் மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yesppa
— Yogi Babu (@iYogiBabu) June 9, 2021
இதேபோல் நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் பரவி வந்தது . இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டதற்கு யோகி பாபு ‘ஆம்’ என பதிலளித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்தார். தற்போது தளபதி 65 , வலிமை ஆகிய படங்களில் நடிப்பதை யோகி பாபு உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.