வேலைவாய்ப்பு பதிவினை மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியது கடந்த மூன்று ஆண்டில் வேலைவாய்ப்பு பதிவினை அலுவலகத்தில் புதுப்பிப்பதற்கு மறந்த பதிவுதாரர்களுக்கு மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே புதுப்பிக்க மறந்த பதிவுதாரர்கள் 27- 8- 2021 க்குள் இணையதளம் மூலம் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணையதளத்தில் புதுப்பிக்க முடியாத பதிவுதாரர்கள் இந்த தேதிக்குள் மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சிவனருள் தெரிவித்துள்ளார்