நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கொக்கலாச்சேரியை கிராமத்தில் ரவி-ஜெயந்தி என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயந்தி காலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த மர்மநபர்கள் ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் ஜெயந்தி அவர்களுடன் போராடியதில் 2 பவுன் நகை மட்டுமே கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது. அதனை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயந்தி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.