நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதால் முட்டையின் ஓடு தரம் குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாமக்கல்லில் வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் எனவும், மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் அதிகம் இருப்பதால் மழையின் ஈரப்பதத்தால் முட்டையின் ஓடு தரம் குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முட்டை ஓடு தரம் குறைவதை தவிர்க்க கோழி தீவனங்களில் ஒரு டன்னுக்கு 2 கிலோ அளவு சோடா உப்பு சேர்க்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மழை காலங்களில் ஏற்படும் அதிக ஈரப்பதத்தினால் அப்ளா என்ற நச்சு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். எனவே ஆய்வக பரிசோதனை செய்தும், தர கட்டுப்பாடு செய்த தனியங்களையே கோழிகளுக்கு தீவனமாக வழங்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.