Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரல…? கிணற்றில் மிதந்த சடலம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிணற்றிற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகமாயிபுரம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி வசித்து வந்துள்ளார். தற்போது நமணசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் தனது மகளின் வீட்டில் மூதாட்டி இருந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து வலையன்வயல் பகுதியில் இருக்கும் கருப்பையா என்பவருக்கு  சொந்தமான கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |