தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் சிலர் ஊரடங்கு தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளியில் ஒன்றாக செல்வது மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஊரடங்கி சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசு, காவல்துறையினர் கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என தெரிவித்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை.இதனை மக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.