சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வசித்து வருபவர் ஜெபமணி. இவர் மீது காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
எனவே மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஜெபமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஜெபமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.