Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு அது தெரியாது” தடை செய்த நாட்டிற்கு சென்றவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் சுல்தான் முகமது மற்றும் சுடர்மணி ஆகிய 2 பேரும் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் தங்களது வேலைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவுக்கு சென்றதும், அதன்பிறகு அரசின் அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றதும் தெரிய வந்துள்ளது.

அதன் பின் இவர்கள் இருவரும் ஏமனில் இருந்து சார்ஜா வழியாக சென்னை திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்திய போது, அவர்கள் ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தங்களுக்கு தெரியாது எனவும், வேலை பார்த்த நிறுவனம் தான் தங்களை ஏமனுக்கு சென்று பணிபுரியுமாறு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |