இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது.
மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்க அந்நாட்டு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியாவில் புதிய தலைநகரை கட்டமைக்க உள்ளதாக இந்தோனேசிய அதிபர் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் 5 புதிய தலைநகரம் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமைய உள்ள புதிய நகரத்திற்கு இன்னும் பெயர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் புதிய தலைநகரை கட்டமைக்க சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காடுகள் நிறைந்த போர்னியோ தீவு இந்தோனேசியா மலேசியா மற்றும் குரூமிங் நாடுகளில் உள்ளது. இருப்பினும் அந்த தீவின் பெரும்பகுதி இந்தோனேசியாவுக்கு சொந்தமானதாகும். நெதர்லாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து 1944-ம் ஆண்டில் இந்தோனேசியா விடுதலை பெற்றது. இதனை தொடர்ந்து 74 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரை மாற்றுகிறது இந்தோனேஷியா.