தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்பில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4000 ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் மற்
இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த நகை கடன் தள்ளுபடி பற்றி பேட்டி அளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி தொடர்பாக விரைவில் முதல்வர் ஆலோசனை வெளியிடுவார். கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லாதோருக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.ஆய்வில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.