இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் நாளுக்கு நாள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக சிறு வயதிலேயே குழந்தைகள் பெற்றோர்களை இழப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களுக்கு பல நிதி உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சிஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பட்டய கணக்காளர் பயிற்சி (சிஏ) இணையவழியில் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளும் கட்டணமின்றி இலவசமாக பயிற்சி பெறலாம். விருப்பமுள்ளவர்கள் www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 7358506400, 8220522669, 9677126011 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.