Categories
தேசிய செய்திகள்

எச்.ஏ.எல். நிறுவனத்தில் 100 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் இயங்கி வருகிறது. பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 100 ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரம் பேருக்கு கொரோனா  பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அந்நிறுவனத்தில் முக்கிய பாதுகாப்பு திட்ட பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் “தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக திட்டமிட்டபடி தயாரிப்புகளை வழங்க முடியவில்லை. ஆனால் லைட் காம்பாட் விமானத்தின் நீண்டகால திட்ட செயல்திறன் பாதிக்கப்படாது ” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |