Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

1,320 சித்த மருந்து பெட்டகம்…. இவர்களுக்கு விரைவில் விநியோகம்…. அதிகாரிகளின் தகவல்…..!!

வேலூருக்கு வந்த 1,320 சித்த மருந்து பெட்டகம் விரைவில் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் .

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தொற்று தடுப்பு பணியில் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் போன்றோர் ஈடுபட்டு வருவதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இந்நிலையில் மாவட்டத்திற்கு கேரளா மாநிலத்தில் இருந்து சித்த மருந்து பெட்டகம் மினி லாரி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அதில் 110 பெட்டிகளில் 12 பெட்டகம் வீதம் 1,320 சித்த மருந்து பெட்டகம் இருக்கின்றது. இந்த சித்த மருந்து பெட்டகம் சுமார் 2 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு விரைவில் வினியோகம் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |