தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கால் தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. மிக விரைவில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும் 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கைகள் என சுமார் 42,000 படுக்கைகள் காலியாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.