சலூன் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சபரி வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக ஆழியாறு பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்டு கிடக்கும் இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆழியாறு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது கடையில் இருந்த கண்ணாடி, டேபிள், டிவி, ஹோம் தியேட்டர் போன்ற அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் மண்ணெண்ணையை ஊற்றி கடைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு பக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் சிதைந்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதனை அடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது கடந்த 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சமயத்தில் அவரின் உருவப் படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். எனவே காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து புகைப்படத்தை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.