சுவிட்சர்லாந்தில், ஒருவர் தன் 8 மாத குழந்தையை அழுத்தியதில் குழந்தை இறந்ததால், ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார்.
சூரிச்சில் உள்ள ஓபர்லாந்தில் வசிக்கும் ஒருவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் வீட்டில், தன் குழந்தையுடன் விளையாடும்போது, குழந்தையை கடுமையாக அழுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதற்கு முன்பும் ஐந்து தடவை, அவர் தன் பச்சிளம் குழந்தையை கையால் அழுத்தியே காயப்படுத்தியிருக்கிறார். அதில் இரண்டு தடவை குழந்தையின் விலா எலும்பு நொறுங்ககூடிய அளவிற்கு கடுமையாக அழுத்தியிருக்கிறார். எனவே குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் 60,000 பிராங்குகள் அவரிடம் இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு கோரியிருக்கிறார்.
மேலும் அவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஹின்வில் மாவட்டத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னை கட்டாயப்படுத்தியதால் தான் ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் உண்மை இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் அவர் விளக்கவில்லை.