Categories
உலக செய்திகள்

இதுல தான் பிரச்சனையா..? திடீரென முடங்கிய இணையம்… உலகம் முழுவதும் எழுந்துள்ள அச்சம்..!!

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள், இணையத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக முடங்கியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள் முடங்கியதற்கு பாஸ்டலி எனும் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பாஸ்டலி நிறுவனம் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கும், இணைய சேவையை வழங்குவோருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து பயனர்கள் காண விரும்பும் தளத்தை மிக விரைவில் காணவும் உதவி செய்கிறது. எனவே இந்த பாஸ்டலி-யின் சேவையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது இந்த சேவையை பயன்படுத்தும் மொத்தம் நிறுவனத்திற்கும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இணையத்தை பயன்படுத்துவோருக்கு எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஸ்போட்டிஃபை, அமேசான், பிரித்தானிய அரசின் இணையத்தளம் என பல தளங்களில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ட்விட்ச், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட பல இணையதளங்களும் பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து தொடர்ந்து மக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனையால் பல இணையதளங்களும் பாதிக்கப்படுவதோடு பெரும் நிதி இழப்பு ஏற்படும் என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |