இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நிவேதா தாமஸ், அஞ்சலி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் ஹரிஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் 28-வது படத்தை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார்.
#PSPK28 😊 pic.twitter.com/BhpRrBZkw3
— Mythri Movie Makers (@MythriOfficial) June 8, 2021
இந்நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘PSPK28 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளியிட முடியவில்லை . இந்த படம் குறித்த பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. யாரும் அதை நம்ப வேண்டாம். சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.