Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரை ஒதுங்கிய கடல் ஆமை… கடித்து குதறிய நாய்கள்… சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் 50கிலோ கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல் பசு என 3000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள எம்.ஆர். சத்திரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 50 கிலோ கடலாமை கரையோரம் உயிரிழந்து கிடந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த ஆமை கடித்து குதறியதில் ஆமையின் தலை வேறு உடல் வேறாக காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வந்த வனத்துறையினர் ஆமையை புதைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |