பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோன் மக்களுக்கு அருகே உரையாடி கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் அவரை கன்னத்தில் திடீரென அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இரண்டாம் கட்ட பிரான்ஸ் பிராந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோன் கடந்த வாரம் லோட்-லிருந்து தனது சுற்றுபயணத்தை தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று ட்ரொமே-ல் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின் தன்-ல்’ஹெர்மிடகே என்ற நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் பள்ளிக்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியை அங்கிருந்த நபர் ஒருவர் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.
🇫🇷 Agredieron al presidente de Francia Emmanuel Macron en su visita a Tain-l'Hermitagepic.twitter.com/hjL2wWHcAN
— Notimix (@Notimix) June 8, 2021
இவ்வாறு காவலர்கள் பாதுகாப்புடனும், மக்கள் மத்தியிலும் இருந்த ஜனாதிபதியை துணிச்சலுடன் ஒரு நபர் பளார் என்று கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.