சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
#maanaadufirstsingle #maanaadu #aVPpolitics #mashaAllah #abudulkhaliq #Silambarasan_TR #maanaadusinglefrom21st @vp_offl @SilambarasanTR_ @sureshkamatchi @madhankarky @U1Records on Twitter spaces pic.twitter.com/Hzxk4dPqyK
— Raja yuvan (@thisisysr) June 9, 2021
மேலும் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் வெங்கட் பிரபுவின் தாயார் மரணமடைந்ததால் பாடல் ரிலீசை படக்குழு தள்ளிவைத்ததனர் . இந்நிலையில் மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 21 ஆம் தேதி மாநாடு படத்தில் இடம்பெற்ற ‘மாஷா அல்லாஹ்’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.