விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
இன்று நீங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து செயல்பாடுகளிலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் அனைத்து செயல்களிலும் வெற்றி நிச்சயம். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை இருக்கும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். வாகனங்களில் உரிய ஆவணங்களை சரிபார்த்தபின் செல்ல வேண்டும். ஆயுதம், தீ போன்றவற்றை கையாளுவதில் கவனம் தேவை. அவசியம் வேண்டுமென்றால் அக்கம்பக்கத்தினரிடம் பேச வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். கவனமாக பேச வேண்டும்.
பிள்ளைகளுடைய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்காமல் இருக்க பாருங்கள். பிறர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்து பண்ண வேண்டாம். காதலில் சின்ன சின்ன சிரமங்கள் ஏற்படும். சிரமங்களை சிறப்பான முறையில் அணுகி வெற்றி கொள்ள வேண்டும். மாணவர்கள் குடும்பத்தாரிடம் கலந்து முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு