Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! உதவிகள் கிடைக்கும்….! பக்குவம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! கவனமாக செயல்பட வேண்டும். 

நீங்கள் நினைத்தபடி தனலாபம் இருக்காது. கண்ணில் உபாதைகள் ஏற்படலாம். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாறுவதற்கான சூழல் உருவாகும். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல பாருங்கள். தேவையான அளவு உதவிகள் கிடைத்தாலும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களைப் பொருத்தவரை பாடங்களை கடினமான முறையில் தான் படிக்க வேண்டியிருக்கும். கல்விக்காக முடிந்தளவு உழைக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். காதல் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கான முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் நிறம்

Categories

Tech |