பிரபல நாடு நடத்திய வான்வெளி தாக்குதலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் சிரிய நாடுகளுக்கிடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இதனையடுத்து இரு நாட்டினுடைய எல்லையிலும் ஈரான் ஆதரவை பெற்ற புரட்சிப் படையினரும், வெளிநாட்டு போராளிகளும் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரிய நாட்டு படையினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இருநாடுகளின் எல்லையில் பதுங்கியிருக்கும் வெளிநாட்டு போராளிகளும், ஈரான் புரட்சிப் படையினர்களும் சிரியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஆத்திரமடையும் இஸ்ரேல் ராணுவம் சிரியாவின் மீது எப்போதாவது விமானப்படை தாக்குதல் நடத்தும்.
இந்நிலையில் சிரியாவின் தலை நகரத்திலிருக்கும் ஹிர்பெட் என்னும் கிராமத்தில் இஸ்ரேல் நாட்டு விமானப் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிரிய நாட்டு ராணுவத்தினர் 7 பேர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் 4 பேர் என மொத்தமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பகம் அறிவித்துள்ளது.